2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு:
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் தங்களின் ரிவார்டு புள்ளிகள் அனைத்தையும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரிவார்டு புள்ளிகள் அனைத்தும் காலாவதி ஆகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு பிரிமியம்:
IRDAIபுதிய விதிகளின்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை அதிகரிக்க உள்ளது. இன்சூரன்ஸ் தொகை அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குரோம் செயல்பாடு:
Windows 7 & 8.1 பதிவுகள் உள்ள லேப்டாப்பில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் குரோம் செயல்படாது என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்பு:
பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பு குறித்து மத்திய அரசு பலமுறை கால அவகாசம் வழங்கிய நிலையில் இதற்கு கடைசி தேதி தற்போது 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
கார்டு விவரங்கள்:
நம்முடைய கூகுள் அனைத்து கார்டு விவரங்களையும் இதுவரை சேமித்து வைத்து நம்முடைய செயல்பாட்டை எளிதாக்கி வந்தது. ஆனால் ஜனவரி 1ஆம் தேதி முதல் நம்முடைய ஆன்லைன் கட்டண விவரங்களை நாம் ஒவ்வொரு முறையும் பதிவிட வேண்டி இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Netflix:
ஜனவரி 1 முதல் நெட்பிளிக்ஸ் தனது பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
வங்கி லாக்கர் விதிகள்:
ஜனவரி 1 முதல் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முதலில் புதிய லாக்கர் விதிகளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதனால் விலைமதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டால் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதனை வங்கியில் சார்பாக வாடிக்கையாளர்கள் பொருட்களுக்கு இணையாக இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.