நாடு முழுவதும் நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமுடக்க மூன்றாம் கட்ட தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடும் கட்டுப்பாடு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் இருந்து வந்த இரவு நேர ஊரடங்கிற்கு தடை விதித்துள்ளது.
இரவு நேரங்களில் பொது மக்கள் நடமாட இருந்து வந்த தடைகள் விலகி கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சி கூடம், யோகா மையங்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், சுதந்திர தினத்தை தனிமனித இடைவெளியுடன் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்கில் வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதி என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பள்ளி கல்லூரிகள் 31 ஆம் தேதி வரை செயல்பட தடை விதித்து உத்தரவு பிறப்பித்த தோடு, மாநிலத்தில் உள்ள சூழ்நிலைக்கு தக்கவாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.