நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் உள்ள அனைத்து தளங்களையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களையும் ஜூன் 15ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.
Categories