நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செயலிழக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமன்றி வருமான வரி சட்டத்தின் கீழ் 10000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இறுதி கெடு கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக இதற்கான கால வரம்பு இன்று வரை நீட்டிக்கபட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் ஆதார் கார்டை பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணைப் இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால் அச்சுறுத்தல் காரணமாக கால அவகாசத்தை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.