Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன் 30 வரை நீட்டிப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் அவசரகால கடன் உத்திரவாத திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மூன்று லட்சம் கோடி அளவிலான அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தை அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தற்போதைய 3 ஆம் கட்டத்தில் விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கும் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |