Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிசம்பர் 1 முதல்…. சிகரெட், பாக்கு, புகையிலை…. அரசு புதிய உத்தரவு…..!!!!

சிகரெட், பான், பாக்கு உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பயன்படுத்துபவர்களை எச்சரிக்கும் வகையில் அவற்றின் மீது இனி புதிய படமும், எச்சரிக்கை வாசகமும் இடம்பெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் புகையிலை பேக்கேஜ்களில் “புகையிலை வலி மிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது”என்ற வாசகம் இடம் பெறும். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் இது மாற்றப்பட்டு “புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்”என்ற வாசகமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது படம் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி ஓர் ஆண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும், பின்னர் 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லுது பேக்கேஜ் செயயப்படும் புகையிலை பொருட்களில் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய சுகாதார எச்சரிக்கைகளின்படி, ‘புகையிலை பயன்பத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்’ என்று கூடிய சுகாதார எச்சரிக்கை புகைப்படம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |