Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிசம்பர் 31ம் தேதிக்குள்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை விரட்ட ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்பதால் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பெரும்பாலான மாநிலங்களில் 80% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்கும் அனைவரையும் கண்டறிந்து டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசி போட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்கு பிறகு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |