Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு சேவை கட்டணம்…..? மத்திய அரசு விளக்கம்….!!!!

கூகுள் பே, போன்-பே, பேடிஎம் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பணவரித்தனை மேற்கொள்வதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலுக்கு மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிகைக்கு பிறகு, நாடு முழுவதும் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ள ஒன்று டிஜிட்டல் பேமெண்ட்ஸ் ஆகும். தற்போது பட்டிதொட்டியெங்கும், பெட்டிக்கடைகள், மளிகை, சலூன், மால்கள், ஜவுளிக்கடைகள், மருந்தகங்கள், டீக்கடைகள் என அனைத்து வித வணிக நிறுவனங்களிலும் கிடைக்கும் சேவையாக இது மாறியுள்ளது. இதில், கூகுள் பே, போன் பே, பேடிஎம், மொபி குவிக், அமேசன் பே, ஏர்டெல் பேமெண்ட் பேங்க் போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் பலரும் பணம் செலுத்தி தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் செல்கின்றனர். கடைகளில் பொருட்கள் வாங்கும்போது பணமாக கொடுக்காமல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்து மக்கள் பயன் பெறுகின்றனர்.

பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் உபயோகமாக மாறியுள்ள இந்த டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வர மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பது குறித்தும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகளிலும் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. இதனால் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யூபிஐ டிஜிட்டல் தளங்கள் மூலம் இலவசமாக பணபரிவர்த்தனை இனிமேல் செய்யமுடியாது என கலக்கம் அடைந்து அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தகவலை பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், யூபிஐ மூலம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை சேவை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்க இது உகந்த நேரம் அல்ல என மத்திய அரசு கருதுகிறது. இந்த சேவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்குவதற்கு இது போன்ற இலவச டிஜிட்டல் சேவைகளை தொடர்ந்து வழங்கப்படவேண்டும். பண பரிவரித்தனையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில், டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறைகளை மேலும் ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

Categories

Tech |