Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் தடுப்பூசி முன்பதிவு செய்ய…. 4 இலக்க ரகசிய எண் அமல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் கொரோனா தடுப்பு ஊசி முன்பதிவு செய்ய கோ- வின் இணையதளத்தில் நான்கு இலக்க ரகசிய எண் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இணையத்தில் முன்பதிவு செய்த சிலர் தடுப்பூசி செலுத்தாமலேயே செலுத்தி கொண்டதாக தவறான தகவல் வருவதாலும், முன்பதிவின் போது தவறான தகவல்களை பதிவிடுவதை தடுக்கவும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

Categories

Tech |