Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் தடை….. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மருந்து 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் போதுமான பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வழங்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லாததால் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டாம். குழந்தைகள் மத்தியில் HRCT இமேஜிங்கை பகுத்தறிவுடன் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |