Categories
மாநில செய்திகள்

“நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம்”… தமிழகத்திற்கு 2 மருத்துவமனைகள்….!!!!!!

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவனம் நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி  திட்டத்தின் கீழ் சேவையை வழங்கி வருகின்றது. இது தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும். இந்த திட்டமானது  தற்போது 443 மாவட்டங்களில்  அமலில் இருக்கிறது. 153 மாவட்டங்களில் பகுதியாக அமல் படுத்தப் பட்டிருக்கிறது. மேலும் 148 மாவட்டங்களில் தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் வசதியே  கிடையாது. இந்த நிலையில் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தில் சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் 180 கூட்டம் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ள 153 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 2022 ஆம் வருடம் இறுதிக்குள் நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதன்படி புதிய கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் 100 படுக்கை வசதி கொண்ட 23 புதிய தொழிலாளர் மருத்துவமனைகளில் நாடு முழுவதும் அமைப்பதற்கு தொழிலாளர்கள் அரசு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதில் தமிழகத்தில் ஈரோடு, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் 2 மருத்துவமனைகள் அமைய உள்ளது.

Categories

Tech |