Categories
அரசியல்

நாடு முழுவதும் நன்கொடை…. எந்தெந்த கட்சி எவ்வளவு வசூல்…. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தகவல்….!!

நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் கடந்த 2019-20 ஆம் ஆண்டு வசூலித்த நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, ஏ.டி.ஆர் என்றழைக்கப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆய்வு மேற்கொண்ட 53 அரசியல் கட்சிகளில் 2 கட்சிகள் சரியான நேரத்தில் தங்கள் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது. ஆனால் மீதமுள்ள 28 கட்சிகள் 6 நாட்களிலிருந்து 320 நாட்கள் வரை தாமதமாக ஒப்படைத்துள்ளது. 23 கட்சிகள் இன்னும் அறிக்கை அளிக்கவில்லை.

அதிக அளவில் நன்கொடை வசூல் செய்த கட்சிகளில் சிவசேனா, அதிமுக, ஆம்ஆத்மி, பிஜூ ஜனதா தளம், ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர். சிவசேனா, 63 கோடி ரூபாயும், அதிமுக 52 கோடி ரூபாயும், ஆம்ஆத்மி 37.7 கோடி ரூபாயும் நன்கொடையாக வசூலித்து உள்ளனர். மேலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடந்த வருடம் 4.63 கோடி ரூபாயும், டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி 52.20 லட்சம் ரூபாயும் திமுக 29 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வசூலித்துள்ளது. இதையடுத்து பான் கார்டு மூலமாக 16 மாநில கட்சிகள் 1,026 நபர்களிடமிருந்து வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை விபரம் இல்லாமல் 25 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |