தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஆக்சிஸ் வங்கி தனது பல சேவைகளுக்கு கட்டணங்களை நாளை முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் 15,000 இருக்க வேண்டும். பிரைம், லிபர்டி சேவிங்ஸ் கணக்கு வைத்திருப்போர் 25 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 50 முதல் 800 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.ஏடிஎம்மில் மாதம் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 10 முதல் 150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.