நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் வாங்குபவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு டெலிவரி செய்யும் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. அதனால் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியரிடம் OTP வழங்க வேண்டும். இந்த புதிய மாற்றமானது புதிய டெலிவரி அங்கீகாரக் குறியீட்டின் ஒரு பகுதியாக வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்த்துவது வழக்கம்.
அதேபோல் இந்த மாதமும் சிலிண்டர் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக வங்கியில் பணம் செலுத்துவது மற்றும் பணம் எடுப்பது போன்ற செயல்பாடுகளுக்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்களில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பாங்க் ஆஃப் பரோடா நவம்பர் 1 முதல் அமலுக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் மற்றும் சென்ட்ரல் வங்கிகளும் இந்த மாற்றத்தை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ரெயில் நேர அட்டவணையில் இந்திய ரெயில்வே மாற்றம் செய்துள்ளது. புதிய நேர அட்டவணை நவம்பர் 1 ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தகவலின்படி 13 ஆயிரம் பயணிகள் ரெயில்களும், 7 ஆயிரம் சரக்கு ரெயில்களும் இந்த நேர மாற்ற அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாட்டில் இயங்கும் 30 ராஜ்தானி ரெயில்களில் நேரமும் கூடிய விரைவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் சிலருக்கு பொருளாதார ரீதியாக சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.