ஆயுஷ்மான் பாரத் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக (Health Insurance) உள்ளது.
நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் வீட்டில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறும் வசதியானது “இ-சஞ்சீவனி” முறையை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் நாளை முதல் ஏப்ரல் 22 வரை நடைபெறும் ஆயுஷ்மான்-சுகாதார நலவாழ்வு மையங்களின் சுகாதார மேளாக்கள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சுகாதார மேளாவின் போது காசநோய், கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் பரிசோதனைகளை மாநிலங்கள் விரிவாக நடத்த வேண்டும். இதன் மூலம் நோயை விரைந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.