Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவது அறிவிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்தது. அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவர்களுக்கும் தற்போது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக தொடங்கவுள்ள CBSE பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்ட திருத்தப்பட்ட புதிய அட்டவணையில், சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற விரும்பும் பள்ளிகளும் ஜூன் 30-ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |