Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு…. ICMR கூறும் அட்வைஸ் இதுதான்…!!!

இந்தியாவில் பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் தீவிரமாக பரவிவந்த தொற்று காரணமாக கிட்டத்தட்ட சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தற்போது படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வந்த பொழுதிலும், அவர்களின் உடல்நிலை மற்றும் கொரோனா சம்பந்தமான அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 500 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால், முப்பத்தி இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குக்கிராமங்கள், சேரிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகளின் எதிர்கால நலனை கருதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் குழந்தைகளின் உடல் நலன், கொரோனா அறிகுறிகளை கண்காணிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |