ஹைதராபாத் புத்தகக் கண்காட்சியில் சிறப்புரை ஆற்றிய நீதிபதி ரமணா, புத்தகம் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் மற்றும் விளையாட்டு விளையாடும்போது மனதில் ஒரு முத்திரை பதிக்கும் என்றும், குழந்தைகளிடையே விளையாட்டுத் திறனை அதிகரிக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் நூலகம், விளையாட்டு மைதானம் இருப்பதை அனைத்து மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நூலகம் தொடர்பாக ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.