Categories
அரசியல்

நாடு முழுவதும் பாஜக அலை…. தமிழ்நாடும் தப்பிக்க முடியாது…. ஹெச்.ராஜா பேச்சு….!!!!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பா.ஜ.க இந்த 4 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “நாடு முழுவதும் பாஜக அலை அடிக்கிறது. அதில் தமிழ்நாடு மட்டும் தப்பித்துக் கொள்ள முடியாது. முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததால் முஸ்லீம் பெண்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |