நாடு முழுவதும் இந்த வருடம் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதற்கு மாதாந்திர வட்டி வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வருமான வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு இந்த அபராத வட்டி தொகை பொருந்தும்.
நாடு முழுவதும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசத்தை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.. இதற்குள் செய்ய முடியாதவர்கள் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் பத்தாயிரம் அபராதத்துடன் தாக்கல் செய்யலாம். நிகர வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ஆயிரம் மட்டும் அபராதம் விதிக்கப்படும். தவறினால் அபராதத்துடன் மூன்று மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் உடனே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.