நாடு முழுவதும் புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு “புலிகள் திட்டம்” என்ற பெயரிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு பல்வேறு தவணைகளாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு 6 கோடி திட்டத்தில் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதல் தவணையாக 2.83 கோடி, இரண்டாவது தவணையாக 1.60 கோடி மற்றும் மூன்றாவது தவணையாக 1.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் புலி வேட்டை தடுப்பு, காட்டு வளங்களை பாதுகாத்தல் மற்றும் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் புலிகளை பாதுகாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.