நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இந்தியா முழுவதிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயங்குகிறார்கள். தடுப்பூசியின் தரத்தில் எந்த சமரசமும் இல்லை. எனவே தடுப்பூசி பயன் தரும். பக்கவிளைவுகள் ஏற்படும் போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.