நாடு முழுவதும் மின்னணு மருத்துவத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தினம் அன்று பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது சோதனை முயற்சியாக 6 யுனியன் பிரதேசங்களில் மின்னணு மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். நவீன மின்னணு தொழில் நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழி வகுப்பதே மின்னணு மருத்துவத் திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவ அடையாள அட்டை திட்டத்தின் கீழ் தனி நபரின் மருத்துவ வரலாற்றை இரகசியத்தன்மை பாதுகாப்புடன், மருத்துவ சேவைக்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல்களை பெறமுடியும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படுவதுடன் செல்போன் செயலி மூலம் மருத்துவ சேவைகளை எளிதாக பெற வழி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதிலும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் திட்டமாக அமைந்துள்ளது.