கொரோனா பேரிடர் கடந்த 5 மாதங்களாக ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனாவில் தாக்கமும், கொரோனாவில் வேகமும் பிற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த சமயத்தில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
அந்த வகையில் தற்போது இருக்கும் பொது முடக்கம் வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுக்கானமூன்றாம் கட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இதில் இரவு நேரத்தில் மக்கள் நடமாட இருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக இரவு நேரத்தில் இருந்த பொதுமுடக்கம் விலக்கிக் கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி வழங்கியுள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் தனிமனித இடைவெளியுடன், முக கவசம் அனிந்து சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.