நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலங்களிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி, அவரவர் சொந்த ஊர்களுக்கு சாலை மார்க்கமாக, நடைபயணமாக, சைக்கிளில் சென்ற நிலை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது
இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன. அந்தவகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மீண்டும் படிக்க மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் சில அடையாள அட்டைகள் மட்டுமே பள்ளிகள் கேட்டுப்பெறலாம். குழந்தைகளின் பெற்றோர் அளிக்கும் தகவல்களை சரியெனக் கொண்டு மாணவர்களை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.