நாடு முழுவதும் மலைவாழ் மக்கள் தரமான கல்வியை பெரும் வகையில் 700 புதிய பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,மலைவாழ் மக்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்யும் வகையில் தனி அமைச்சகம் பாஜக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.நாடு முழுவதும் மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அரிசிக்கு மானியம் வழங்கி வருகின்றது.
வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் மட்டும் எட்டு இடங்களில் மலை வாழ் மக்களுக்கான சிறப்பு பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலைவாழ் மக்கள் தரமான கல்வியை பயிலும் வகையில் நாடு முழுவதும் 700 புதிய பள்ளிகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு மலைவாழ் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.