நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து அரசு துறை அலுவலகங்கள்,பள்ளி கல்லூரிகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுவர்.இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு யுஜிசி ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் சமூக வலைதள பக்கத்தில் #HarGharTiranga என்ற ஹேஸ்டேக்கில் பதிவுகள் இடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது