Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மாணவர்கள் மகிழ்ச்சி… மத்திய அரசு அதிரடி முடிவு…..!!

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் ஒரு மாதத்திற்கு இயங்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா கால பொதுமக்கள் அமலில் இருந்து வருகிறது. வருகின்ற 31ம் தேதியோடு பொதுமுடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல பள்ளி கல்லூரிகள் 31ம் தேதி வரை இயங்கு வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச விமானங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மீட்டு வருவதற்கு சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மெட்ரோ, ரயில்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு தொடர்ந்து செயல்பட அனுமதி இல்லை. பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் யோகா உடற்பயிற்சிக் கூடங்கள் இயக்க அனுமதி பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |