Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல்…. 12 – 14 வயது சிறார்களுக்கு…. மத்திய அரசு அதிரடி… !!!!

12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 157 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பதின் பருவத்தினருக்கான தடுப்பூசி இயக்கமானது நாடு முழுவதிலும் வேகமெடுத்து வருகிறது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கடந்த 13 நாட்களில் சுமார் 3 கோடியே 31 லட்சத்துக்கும் அதிகமான முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 7 1/2 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சாத்தியமான பிறகு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் 12- 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா உறுதி செய்துள்ளார். 12 வயதுக்கு மேற்பட்டோரையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக டாக்டர் அரோரா விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |