Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் 15 முதல் வேலைநிறுத்தம்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடுமுழுவதும் மார்ச்  15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதனை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருவதால் காய்கறிகள், மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

எனவே, டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் இம்மாதம் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், மார்ச் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |