Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்…. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை உழைக்க பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மலைப் பிரதேசங்களுக்கு செல்வோர் கொரோனா விதிகளை பின்பற்றாத காரணத்தால் மீண்டும் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. சந்தை, பொது இடம் மற்றும் சுற்றுலா தலங்களில் கொரோனா விதிகள் பின்பற்றப்படும் அதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |