Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்…. அமலாகுமா முழு ஊரடங்கு…? பிரதமர் எடுக்கும் முடிவு…!!!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் மிகக் கடுமையாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரமாக பரவியிருந்தது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு  போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாத இறுதியில் தொற்று  குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு முன்னெச்சரிக்கையுடன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

இதற்கிடையில்கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில் கடந்த சில நாட்களாக தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அந்நாட்டில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சாங்சுன், ஷாங்காய் போன்ற நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் பரவும் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா  விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்று இந்தியாவிற்கு வரும் பட்சத்தில் கொரோனா தொற்றின்  நான்காவது அலை வீசக்கூடும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக  ஜூன் மாதத்தில், இந்தியாவில் கொரோனா நான்காவது அலை வீச வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தது  குறிப்பிடத் தக்கதாகும்.

Categories

Tech |