குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.
அது மட்டுமன்றி பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது.தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், சூரத், வதோதரா, அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங்களிலும் ஊரடங்கு கடமையாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் உள்ளிட்ட மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.