Categories
கல்வி தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு…. செப்டம்பர் மாதத்திற்குள்…. ஏமாந்து போன மாணவர்கள் …!!

கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு யூஜிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கல்விநிலையங்களில் நடைபெறாமல் இருந்த பொதுத் தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. மாநில பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் சரி, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளும் பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவித்தன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஹாஷ்டக்குகளை ட்ரெண்ட் செய்தனர்.

இதனையடுத்து பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று யூஜிசி சார்பில் ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப் பட்டிருந்த இந்த குழு முக்கிய பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் வழங்கியது. அதில், தற்போதைய சூழலில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு, சுகாதாரப் பிரச்சினை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்திருந்தது.

மாணவர்களுக்கு முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், அவர்களுடைய ( செயல்திறன் ) பேர்பார்மன்ஸ் – இன் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கலாம். இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள், தேர்வு எழுத தயார் என சொல்லும் மாணவர்கள் இறுதியாண்டு  தேர்வை எழுதிக் கொள்ளட்டும். அதனை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளட்டும் என்ற பரிந்துரையை யூஜிசியிடம் அந்தகுழு வழங்கி இருந்தது. இதனால் பல்கலைக்கழக, கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்  ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புகளை வெளியாகும் என்று மாணவர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் தான் மத்திய அரசு  வழங்கிய பரிந்துரை மாணவர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உயர் கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், யுஜிசி வழிகாட்டுதல்படி இறுதித் தேர்வுகளை பல்கலைக்கழக கட்டாயம் நடத்த வேண்டும். இறுதித் தேர்வில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

இதனையடுத்து பல்கலைக்கழக மணியக்குழுவிடம் இருந்து கொரோனவால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி ஆண்டு தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் நடத்திக்கொள்ளலாம். நாடு முழுவதும்  உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் கல்லூரி மாணவர்கள் பள்ளியை போல எங்களுக்கு அமையவில்லையே என்று வேதனையில் இருந்து வருகின்றனர்.

 

 

Categories

Tech |