Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய உத்தரவு – இனி அனுமதி தேவையில்லை …!!

புதிய வகை கரோனா வைரஸ் பரவலின் மத்தியில் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தின் (Lockdown) கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தனது மூன்றாவது திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்கள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். புதிய வழிகாட்டுதலின் கீழ், கோவிட் -19 பரவுவதை எதிர்த்து நாட்டில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் நீக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.

அதன்படி, சுதந்திர தின செயல்பாடுகள் தகுந்த இடைவெளி கடைப்பிடித்தலுடன் அனுமதிக்கப்படும் மற்றும் முகக்கவசங்கள் அணிவது போன்ற பிற சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் கட்டாயம் என அரசாங்கம் தெரிவிக்கிறது.

இது தவிர, யோகா நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும். இது தொடர்பாக நிலையான இயக்க விதிமுறைகள் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்படும்.

நாடு முழுவதும் உள்ள மக்கள், பொருள்களின் மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்காது. அத்தகைய இயக்கத்திற்கு கூடுதல் பாஸ் அல்லது பிற அனுமதி தேவையில்லை.

Categories

Tech |