ஆன்லைன் உணவு நிறுவனமான சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆப்கள் திடீரென முடங்கியதால் மக்கள் உணவுகளை ஆர்டர் செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆன்லைன் உணவு விநியோக செயலி மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் நாடு முழுவதும் Zomato, Swiggy ஆப்கள் கடந்த சில நிமிடங்களாக முடங்கியது. இந்த இரண்டு செயலிகளும் ஒரே நேரத்தில் மூடங்கியதால் உணவுகளை ஆர்டர் செய்ய முடியாமல் இலட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து இரண்டு நிறுவனங்களின் தரப்பில் இருந்தும் எந்தவித விளக்கமும் தரவில்லை. சோமொடோ, ஸ்விக்கி ஆப்கள் திடீரென முடங்கியது ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது தொடர்பான மீம்ஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.