நாடு முழுவதிலும் டிசம்பர் 8-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது.
இந்நிலையில் பல கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய போதும் முடிவு எட்டப்படவில்லை. அதனால் டிசம்பர் 5 ஆம் தேதி உருவ பொம்மை எரிப்பு போராட்டம், டிசம்பர் 7ஆம் தேதி விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டம்,டிசம்பர் 8-ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.