Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மே 1 முதல்…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது முதல் கட்டமாக சுகாதாரத்துறை மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு மார்ச் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து கொண்டே வருவதால் 18 வயதுக்கு மேற்பட்டோரும் வருகின்ற மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏழைகள்,நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 12 கோடிக்கு மேற்பட்ட ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |