டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை மேம்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வேகமான மற்றும் இலவச Wi-Fi இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை, நாடு முழுவதும் உள்ள 6,071 ரயில் நிலையங்களில் அதிவேக Wi-Fi சேவை இருக்கிறது.இந்த ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு முதல் அரை மணி நேரம் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. Wi-Fi சேவை அரை மணி நேரத்திற்குப் பிறகு கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. உதாரணமாக ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இணையத்தை பயன்படுத்துவது வசதியானது.
மேலும் மாதந்தோறும் ரயில்வே ஸ்டேஷன்களில் மொத்த டேட்டா பயன்பாடு சுமார் 97.25 டெராபைட்களாக இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி அண்மையில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே ஸ்டேஷன்களில் அளிக்கப்பட்டு வரும் Wi-Fi வசதி பொதுமக்களுக்கு ஆன்லைன் சேவைகளை பெற உதவுகிறது. இதுபற்றி மத்திய ரயில்வே அமைச்சர் கூறுகையில், ரயில்வே ஸ்டேஷன்களில் wi-fi வழங்கும் திட்டத்திற்காக ரயில்வே அமைச்சகத்தால் தனியாக நிதி எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 193 ரயில்வே ஸ்டேஷன்கள் Wi-Fi சேவைகளை வழங்க, தொலைதொடர்பு துறை யுனிவர்சல் சர்வீஸ் ஒப்பிலிகேஷன் ஃப்ண்டின் கீழ் 27.22 கோடி ரூபாய் நிதியை அனுமதித்துள்ளது. சுமார் 1,287 ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை Wi-Fi வசதியை RailTel கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் வழங்குகிறது. மீதமுள்ள ரயில் நிலையங்களில் பல நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு தொண்டுத் திட்டங்களின் கீழ் Wi-Fi சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக எந்த மூலதன செலவும் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் உள்ள ஸ்டேஷன்களில் வழங்கப்பட்டு வரும் பாஸ்ட் மற்றும் பிரீ wi-fi வசதி உலகின் மிகப்பெரிய பொது நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இந்த வசதி ரயில்வே ஸ்டேஷன்களில் காத்திருக்கும் நேரத்தில் அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா இடையிலான டிஜிட்டல் இடைவெளியை குறைக்க இலவச இணைய சேவைகள் உதவும் என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.