Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரெப்போ வட்டி… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வங்கி கடன்களில் வட்டி விகிதம் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நான்காவது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும். தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க கடன் பெறும் சூழலை ரிசர்வ் வங்கி தொடர்ந்து அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது. மேலும் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் +0.1%, 4வது காலாண்டில் +0.7% ஆக இருக்கும். வருங்காலங்களில் நகர்புறங்களில் தேவை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

Categories

Tech |