கொரோனா பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் ஐந்து கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை தடுக்க பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கோதுமை, அரிசி போன்ற பொருட்களின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.