Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் லாக் அப் டெத் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிகரித்துவரும் காவல் மரணங்கள் தொடர்பாக மத்திய அரசு, தேசிய மனித உரிமை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி கடந்த 2017 – 2018 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மொத்தம் 148 காவல் மரணங்கள் நிகழ்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் இந்த காவல் மரணம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சொல்லப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி நாடு முழுவதும் அதிகரித்து வரும் தகவல் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம்,  மத்திய அரசு உடனடியாக விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு நாங்கள் உத்தரவிடுகிறோம். இந்த மரணங்கள் சம்பந்தமாக நாங்கள் கவலை தெரிவிக்கிறோம் என்ற கருத்தை தெரிவித்தார்கள்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்தையும் இருக்கக்கூடிய மனித உரிமை ஆணையம் காவல் மரணங்கள் சம்பந்தமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது சம்பந்தமாகவும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை அடுத்த கட்டமாக ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Categories

Tech |