நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வங்கிகள் ஏப்ரல் மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கு வங்கி தொடர்பான வேலைகள் ஏதாவது இருந்தால் அதனை உடனே விரைந்து முடித்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நாட்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15 பெங்காலி புத்தாண்டு, ஏப்ரல் 16 போ ஹாக், 21 ராமநவமி, ஏப்ரல் 24 4 வது சனிக்கிழமை, ஏப்ரல் 11,18,25 ஞாயிறு விடுமுறை. மேற்கூறிய விடுமுறை தினங்களில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப சில தினங்கள் மாறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.