Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வரும்14 ஆம் தேதி…. இளைஞர்களுக்கான பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா…. விண்ணப்பிப்பது எப்படி….???

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தனர். பின்னர் இயல்புநிலைக்கு திரும்பி நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 14-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் 190 இடங்களில் பிரதான் மந்திரி மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. dgt.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஐந்து முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல ஐடிஐ, டிப்ளமோ, முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டாதரிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

முதலில் dgt.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இப்போது முகப்புப் பக்கத்தில் பயிற்சி மேளா என்ற போர்ட்டலுக்கு செல்வதற்கான பட்டனை கிளிக் செய்ய வேண்டும். புதிய பக்கம் திரையில் தோன்றும். இப்போது உங்களின் தகவல்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு கடவுச்சொல் மற்றும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி உங்களின் கணக்கிற்குள் உள் நுழைய வேண்டும்.

பிறகு Apprenticeship Dashboard திறக்கும். இப்போது பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளாவிற்கு விண்ணப்பிப்பதற்கான லிங்கை பெறுவீர்கள். இந்த இணைப்பை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இறுதியாக கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Categories

Tech |