Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விமானம் டிக்கெட் விலை உயரும் அபாயம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

விமான எரிபொருள் விலையை 2.75% எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த நவம்பர் மாதம் குறைந்தது. இதனால் டிசம்பர் மாதம் விமான எரிபொருளின் விலை 2 முறை குறைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தற்போது மாறாமல் நிலைபெற்று உள்ளது. இது விமான எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2,039 அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பை தொடர்ந்து டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை 76,062 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதந்தோறும் 1 மற்றும் 16ம் தேதிகளில் விமான எரிபொருளின் விலை மாற்றி அமைக்கப்படும். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைத்து மத்திய அரசு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சில மாநிலங்களில் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |