இ-காமர்ஸ் மற்றும் ரீடெய்ல் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான ஆபர்களுடனான பொருள்களை விற்பதற்கு தடை விதிக்க நுகர்வோர்- உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஈகாமர்ஸ், ரீடெயில் நிறுவனங்கள் தொழில்வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் கூறியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடிகள் மற்றும் நியாயமற்ற வர்த்தக முறைகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த முடிவு மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும் வழக்கமாக நடத்தப்படும் ஆன்லைன் வர்த்தக தள்ளுப்படி விற்பனைக்கு எந்த தடையும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.