Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் புத்தாண்டுக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி சம்மன் நிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடம் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. இதில் 9 தவணையாக விவசாயிகளுக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10 வது தவணை பணம் டிசம்பர் மாதம் மத்தியில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியது. இந்தப் பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அடுத்த தவணையிலிருந்து 2000 ரூபாய்க்கு பதிலாக 4000 ரூபாய் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. நிறைய விவசாயிகள் தங்களது வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என்று இப்போதே பார்க்க தொடங்கியுள்ளனர்.

விவசாயிகள் தங்களது பெயர் மற்றும் தவணைப் பணம் குறித்த விவரங்களை ஆன்லைன் மூலமாகவே சரிபார்க்கலாம். அதற்கு https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும். அதில் ‘farmers corner’ என்ற ஆப்சன் இருக்கும். அதில் சென்று ‘Beneficiary status’ என்பதை கிளிக் செய்து பார்க்கலாம். உங்களுடைய மொபைல் நம்பர், ஆதார் நம்பர் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். இவ்வாறாக 10ஆவது தவணைப் பணம் குறித்த நிலவரத்தை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

Categories

Tech |