இந்தியாவில் 10 ஆவது மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்தியாவில் 10 ஆவது மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது வரை டெல்லி, கேரளா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் ஏற்கனவே பறவைக்காய்ச்சல் உறுதியான நிலையில், இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மற்ற மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.