Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 12 – 18 வயது சிறுவர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் கோவின் இணையதளத்தில் குழந்தைகளையும் பதிவு செய்ய அரசு தனது தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சிறுவர்களுக்கு செலுத்தப்பட அனுமதி பெற்றுள்ள இரண்டாவது தடுப்பூசி கோவக்சின் ஆகும். இதற்கு முன் Zycov-D தடுப்பூசி சிறுவர்களுக்கு செலுத்த அரசு அனுமதி அளித்தது. ஆனால் இந்த தடுப்பூசி 3 டோஸ் கொண்ட தடுப்பூசி ஆகும். அதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு இந்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். அதாவது சிறுவர்களுக்கான தடுப்பூசி கொள்கைக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Categories

Tech |