பிரதான் மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேசிய அவர், பிரதான் மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் படி நவீன,கண்டுபிடிப்பு சார்ந்த கட்டளை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையின் முழு அம்சத்தையும் உள்ளடக்கிய வகையில், இவை மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும்.
இந்த பள்ளிகளில் கண்டுபிடிப்பு சார்ந்த கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், நவீன தொழில்நுட்ப வசதிகள், ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும். மேலும் பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் மாற்றியமைக்கும் சீர்திருத்தங்களுக்கு வழிவகுப்பதை நோக்கமாக புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.